கர்ப்பகால தடுப்பூசி பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை:

கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியமானது, அது  குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் தடுக்க  உதவும்.

கர்ப்ப கால தடுப்பூசி பல தொற்றுகளில் இருந்து தாயையும், குழந்தையையும் காப்பாற்ற, நோய் எதிர்ப்பு சக்தி கருவில் வளரும் குழந்தைக்கு அளிக்க உதவும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள் எதுவும் வராமல் காக்க உதவும். 

கர்ப்பத்திற்கு  முன் போடப்படும் தடுப்பூசி:

  1. ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமாக காய்ச்சல். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை  பாதிக்கும். கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்த பரிசோதனை  மூலமாக மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக் கூடாது
  2. கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன் பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
  3. ஹெபடைடிஸ் பி – இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும். கர்ப்பம் ஆவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பி க்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:

  1. டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) – இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
  2. TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில் வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது. குழந்தை பிறந்த 6 வாரத்தில் டிப்தீரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.
  3. காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் – செயலற்ற காய்ச்சல் வைரஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது. இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில்  நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:

கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல் தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய் தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course