
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தோற்றால் மீண்டும் ஊரடங்கு என்னும் வதந்தியை நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த இவர் இந்தியாவில் 19 மாநிலங்களில் தொற்று அதிகமாக பரவி உள்ளது அதில் தமிழகமும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,நாள் ஒன்றுக்கு 1000 பேருக்கு பாதிப்புக்குள்ளாகும் என்றும் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணங்கள் கோவில் திருவிழாக்கள் என மக்கள் அதிகம் கூடியிருந்ததால் நோய் தொற்று மேலும் பரவியது. இந்நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் இன்னும் அதிகளவில் கூடுவதால் தொற்று பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் போல் இந்த ஆண்டு மார்ச் மாதமும் கொரோனா நோய் அதிகம் பரவ தொடங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதுவரை தமிழகத்தில் 16 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார்கள் என்றும் நோயை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களில் கோவிட் கண்காணிப்பு மையம் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது முதலில் பரவிய கொரோனா நோய் பரவுவதாகவும் உருமாறிய கொரோனா நோய் பரவவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாகவும். மேலும், சென்னையில் அண்ணா நகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதாக செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்.







