தூக்கி வீசிய காட்டு யானை; உயிரிழந்த மலைவாழ் பெண்…. 

 

டாப்ஸ்லிப் வனப்பகுதியில் பொள்ளாச்சி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டு யானை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

பொள்ளாச்சி அருகில் உள்ள டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூமாட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் பரமன். இவரது மனைவி வனத்தாயி மற்றும் அவரது தாயார் ராமாத்தாள் இருவரும் நேற்று மாலையில் அருகில் உள்ள வனப்பகுதியான டாப்ஸ்லிப் வனப்பகுதியில் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

 

 

அப்போது எதிர்பாராத விதமாக காட்டு யானை வந்தது. அதிர்ச்சியான இருவரும் ஓடியுள்ளனர். இருவரையும் துரத்திய காட்டு யானை வனத்தாயை தூக்கி வீசி மிதித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் அதிர்ச்சியில் விரைந்து வந்து பார்த்த மலைவாழ் மக்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்த  வனத்தாயை பார்த்தனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனதாயின் உடலை அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

பெண்ணை மிதித்த சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும், போக்குவரத்து வாகன வசதி இல்லாததால் உடலை மீட்டு கொண்டு வருவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. எனவே வன கிராமங்களுக்கு தார் சாலை வசதி மற்றும்  வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அதே போல இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் தெரு விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானை மிதித்து மலைவாழ் மக்கள் குடியிருப்பு சேர்ந்த பெண் பலியான சம்பவத்தால் அப்பகுதி மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course