தயிர் சாதத்துக்கு காயகல்ப தொக்கு

ராஜக்கனி என்றாலே நம் நினைவுக்கு வருவது எலுமிச்சையும், நெல்லிக்கனியும் தான். அரி நெல்லி, காட்டு நெல்லி என இரு வகைகள் உள்ளன.

அரிநெல்லி என்பது மென்மையும், அளவில் சிறியதாகவும் நம் வீட்டு தோட்டத்தில் சாதாரணமாக காட்சியளிக்கும் நெல்லி வகை தான். காட்டு நெல்லி என்பது மிகுந்த புளிப்பும், துவர்ப்பும் கலந்த கனி. ஏழைகளின் ஆப்பிள் என்று பெயர் பெற்ற கனி தான் காட்டு நெல்லி.

விலை மலிவாகவும் எளிதாக கிடைப்பதால் தான் நாம் நெல்லிக்கனியை கண்டுகொள்வதில்லையோ! மற்ற எல்லா கனிகளையும் விட நெல்லிக்கனியில் தான் 600 மி.கி விட்டமின்கள் உள்ளது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள நோய்களுக்கு மருந்தாகவும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கிறது.

பெரும்பாலான ஆயூர்வேத மருந்துகளில் நெல்லிக்கனி உள்ளது. இளமையை தக்கவைத்துக் கொள்ள காயகல்பமான நெல்லியை விதவிதமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த கனியை நேரிடையாக சாப்பிடும் போது தான் முழுப்பலன் கிடைக்கும். ஒரு மாறுதலுக்கு நெல்லி தொக்கு செய்து பார்க்கலாம்.

Preparation time :30 minutes
Cooking time :30 minutes
Category : pickle / veg

நெல்லிக்காய் தொக்கு

Kayakalpa Thokku

உருண்டு திரண்ட புதிதாக உள்ள நெல்லிக்காயாக வாங்கி கொள்ளவும்.

தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் – 30
எண்ணெய் – 3/4 கப்
மிளகாய்த்தூள் – 6 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 டீ ஸ்பூன்
வெந்தயம் – 2 டீ ஸ்பூன்
உப்பு – 1/2 கப்
பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்

செய்முறை :
1. நெல்லிக்காய்களை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு வேக வைக்கவும்.

2. சிறிது ஆறியவுடன், அவற்றை கையால் சிறு சிறு பிளவுகளாகப் பிளந்து விதையை நீக்கி எடுத்து மிக்சியில் நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவற்றை தாளிக்கவும்.

4. பிறகு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரத்தில் மிளகாய்த்தூளையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

5. பிறகு அரைத்து வைத்த நெல்லிக்காய் விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.

6. அதன் பின் உப்பை சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். இதற்கு சுமார் 15-30 நிமிடங்கள் பிடிக்கும்.

7. அடுப்பை அணைத்து ஊறுகாய் நன்கு ஆறியவுடன் உலர்ந்த பாட்டில்களில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.

Indian Gooseberry Recipe

8. சுவையான நெல்லிக்காய் தொக்கு தயார். தயிர் சாதத்திற்க்கு தொட்டுக்கொள்ளவும், சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். அருமையான தொக்கு தயார்.


Gooseberry is called as “nelli” in tamil. It is of two types – ari nelli and kaatu nelli. Kaatu nelli is rich in sour taste. It gives immune power to the body. Intake of Nellikai helps in maintaining youth and used as medicine for many diseases. It is found in ayurvedic medicine. Nellikai can be made as pickle or thokku. Follow the given easy steps to prepare tasty nellikai thokku.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course