உடல்நலத்திற்கு கத்திரிக்காய் தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. அது மட்டுமில்லாமல் இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமாக உடலின் நலனுக்கு உதவுகிறது. கத்தரிக்காய் என்பது இந்திய சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எளிதான காய்கறியாகும். இதில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது . மேலும் இது செரிமானம் மற்றும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு உதவும் கத்திரிக்காய்….

நீர் அதிகம் அருந்தாமல் இருப்பது , உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரிபதனால் மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
சிறுநீரகங்களின் நலம் காக்கும்….

கத்திரிக்காயை அதிகம் உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெறுகிறது , இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. கத்திரிக்காய் அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படுகிறது.எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நுரையீரல் மற்றும் சுவாச பிரச்சனையை நீக்கும்…

நாம் நம் வாழ்நாளில் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
கத்திரிக்காய் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கலாம்…

கத்திரிக்காயில் வைட்டமின் சி, ஈ சத்துகள் மற்றும் இரும்புசத்து ஆகியவை நிறைந்து இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
அளவுக்கதிகமான தேவையற்ற கொழுப்புகளை நீக்கும்…

நமது உடல் மிகவும் பலமாகவும் ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகிறது. தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கலாம்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







