உங்க உடலில் இயற்கையாகவே ஆக்சிஜன் அளவு அதிகரிக்க நீங்க இதை கொஞ்சம் செஞ்சுதான் பாருங்களேன்.

தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது கோர அலை தீ போல்  வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதே சமயம் பல  இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன்  தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்ற சூழலில்  ஆக்சிஜன் என்பது நம் உடலில் இயற்கையாகவே உருவாக்க முடியும். ஆதலால், இயற்கையாக உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க சில சுவாசப் பயிற்சிகள் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். SARS-COV-2 வைரஸ் நுரையீரல் மற்றும் சுவாச மண்டலத்தின் மீது மிகவும் கடுமையான தாக்குதலை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

முதல் கட்டமாக  நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், பல பேர் மூச்சுவிடுதலில்  சிரமப்பட்டு வருகிறார்கள். யோகாசனம், உடல் பயிற்சி மற்றும் ஆழ்ந்த சுவாசம் என்பது நுரையீரலை வலுப்படுத்தவும், ஆக்ஸிஜன் ஓட்டத்தை மீட்டெடுக்கவும் உதவும். இக்கட்டுரையில், இயற்கையாகவே உங்கள் உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க உதவும் சுவாசப் பயிற்சிகள் என்ன என்பதை காணலாம்.

மூச்சுத்திணறலை குறைக்க உதவும் வழிமுறைகள் 

 கொரோனா நோயாளிகளுக்கு, லிப் சுவாசம் போன்ற சில சுவாச நுட்பங்கள் மூச்சுத்திணறலைக் குறைக்கவும் சிக்கல்களை குறைக்கவும் உதவும் என்றும் மருத்துவ ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இது தவிர, ஆழ்ந்த சுவாசம் ஒரு நோயாளியின் மன அழுத்தத்தையும் பதட்ட நிலைகளையும் குணப்படுத்தவும், விரைவாக குணமடையவும் உதவும். 

அதற்கு நாம் சில மூச்சு பயிற்சிகளை மேற்கொண்டால் போதுமான அளவு நம்மால் ஆக்ஸிஜன் விகிதத்தை அதிகரித்து கொள்ள முடியும் 

சுவாசப் பயிற்சிகள்

யோகாசனங்கள், ஆழமான சுவாச பயிற்சிகள், நுரையீரல் செயல்பாட்டை வலுப்படுத்துதல் இவை வீட்டில் தனிமைப்படுத்துதலின் கீழ் ஒரு நோயாளியால் எளிதாக செய்யலாம். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இப்போது தீவிரமாக பரிந்துரைக்கின்றனர். கொரோனா மட்டும் இன்றி  நமக்கு வேறு எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சரி இந்த வழிமுறைகள் நமக்கு உதவிக்கரம் நீட்டும். இந்த பயிற்சிகள் வைரஸை நேரடியாக எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவாது, ஆனால் இது உங்கள் மீட்டெடுப்பை மிகவும் எளிதாக்குகிறது.

1. அனுலம் விலோம் (Anulom vilom)

அனுலம் விலோம் மூச்சுப் பயிற்சி எவ்வாறு செய்வது என்பதை கீழே பார்க்கலாம்..

 • முதலில் நாம் நமக்கு வசதியான நிலையில் அதாவது தியான நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.
 • நமது உடலையும் மனதையும் தளர்வாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • இப்போது ஒரு கையின் கட்டை விரலைக் கொண்டு மூக்கின் வலது துவாரத்தை மூடிக்கொண்டு, இடது துவாரத்தை திறந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 • பின் இடது துவாரத்தின் வழியாக ஆழமாக மூச்சை இழுக்க வேண்டும்.
 • மூச்சை வெளியே விடும் போது வலது பக்க மூக்குத் துவாரத்தை ஆள்காட்டி விரலால் மூடிக்கொள்ள வேண்டும்.
 • இவ்வாறு மாற்றி மாற்றி இந்த மூச்சுப் பயிற்சியை 5 முதல் 10 நிமிடங்களுக்குச் செய்யாலாம். நல்ல பலன் கிடைக்கும்.

2.டையஃப்ராக்மேட்டிக் (Diaphragmatic) மூச்சுப் பயிற்சி

இந்த மூச்சுப் பயிற்சியை பின்வரும் முறையில் செய்யலாம்.

 • முதலில் நமது முகம் மேல் நோக்கி பாா்க்கும் வரையில் படுத்துக் கொள்ள வேண்டும். அப்போது நமது உதடுகள் மூடி இருக்க வேண்டும்.
 • நமது கழுத்து மற்றும் முட்டு ஆகிய உறுப்புகளுக்கு அடியில் தலையனையை வைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு கையை மாா்பின் மீது வைத்துக் கொள்ள வேண்டும், மற்றொரு கையை நமது வயிற்றில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • இப்போது மூக்கின் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். அவ்வாறு மூச்சை இழுக்கும் போது, படுத்த நிலையிலேயே நமது கைகளால் நமது உடலை அழுத்த வேண்டும்.
 • மூச்சை வெளியில் விடும் போது கைகளை அசைக்கக்கூடாது.
 • இந்த பயிற்சியை 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.தொடா் மூச்சுப் பயிற்சி (Coherent breathing)

இந்த மூச்சுப் பயிற்சியை பின்வருமாறு செய்யலாம்.

 • நாம் வசதியான நிலையில் அமா்ந்து கொள்ள வேண்டும்.
 • பின் மூச்சை இழுக்கும் போது 1 முதல் 5 வரை எண்களை எண்ணிக் கொள்ள வேண்டும்.
 • மூச்சை வெளியில் விடும் போதும் இவ்வாறு 1 முதல் 5 வரை எண்களை எண்ண வேண்டும்.
 • இவ்வாறு மூன்று முதல் ஐந்து நிமிடம் நாம் இதை செய்யலாம்.

மூச்சுப் பயிற்சி செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

 • மூச்சுப் பயிற்சி செய்யும் போது நமது உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்றாக கவனிக்க வேண்டும்.
 • காய்ச்சல், மார்பக வலி, மூச்சுத் திணறல், தலைச் சுற்றல், இதயத் துடிப்பில் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் இருக்கும் போது மூச்சுப் பயிற்சியை செய்யக்கூடாது.
 • அதுபோல் தொடா்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வரும் நிலையில், உடனடியாக அதை நிறுத்தக் கூடாது.
 • காலை மாலை அல்லது இரண்டு வேளையும்  இதை செய்தாலும் நன்மை பயக்கும்.                        

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course