மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

மார்பகப் புற்றுநோய்  இந்திய பெண்களை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோய். வருடத்திற்க்கு ஒரு லட்சம் பெண்களில் சுமார் 25% பெண்கள் மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள். 2015ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் படி 40லிருந்து 45 வயது வரை உள்ள பெண்கள் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

Breast Cancer

இந்திய பெண்களின் தயக்கமும், புற்றுநோய் பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் இல்லாததால் ஆரம்ப கால அறிகுறிகள் காட்டும் போது அறியாமையால் மருத்துவர்களை நாடாமல் நோய் முற்றிய நிலையில் தான் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மார்பக புற்றுநோய் தான் அதிகமாக காணப்படும் ஒன்றாகும்.

சென்னையில் மட்டும் ஒரு லட்சம் பெண்களில் 21 பேருக்கு இப்புற்றுநோய் பாதிக்கிறது என்று அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் :
ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு தாயும் ஏன் ஒவ்வொரு படித்த பெண்ணும் தன்னை சேர்ந்தவர்களுக்கு புற்றுநோய் பற்றிய விவரங்களை எடுத்து கூற வேண்டும்.

Breast Cancer Symptoms

1. மார்பகத்தில் கட்டி அல்லது அக்குளில் நெரிக்கட்டு ஏற்படுதல். மார்பக சுயபரிசோதனையில் தென்படும் அசையும், அசையாத கட்டிகள் ஒரு முக்கிய அறிகுறி.

2. மார்பக அமைப்பில் ஏற்படும் மாற்றம் அதாவது திடிரென மார்பகத்தின் அளவு மற்றும் எடை அதிகரித்தல்.

3. மார்பக காம்புகளிலிருந்து இரத்தத்துடன் சீழ் கலந்து கசிவு.

4. மார்பக காம்புகள் உள்ளிழுத்துக் கொள்ளுதல்.

5. மார்பகத் தோலில் ஏற்படும் சுருக்கம். ஆரஞ்சு தோல்களில் உள்ளது போல புள்ளி புள்ளியாக காணப்படும்.

6. மார்பகம வீங்கி இருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டும்.

7. மார்பகம் சிவந்து, தோல்கள் தடித்து அரிப்பு ஏற்படும்.

8. மார்பகம் மற்றும் நிப்பிள் அதாவது மார்பககாம்பில் வலி.

9. வலியுடன் அல்லது வலியில்லாத கட்டிகள் மார்பகத்தில் தென்படும்.

10. அக்குள் பகுதியில் வீக்கம் ஏற்படும்.

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையின் பேரில் மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பதை அறிந்து தக்க சிகிச்சையை பெறவேண்டும்.


Breast cancer starts when cells in the breast begin to grow out of control. Cells may spread through the breast to lymph nodes or to other parts of the body. It is the most common cancer type in women after Ovarian cancer. Symptoms of inflammatory breast cancer include, breast skin becomes thick, red, and look pitted, like an orange peel, swelling in or around breast, itching, rashes, nipple changes and bloody discharge. As per 2015 statistics, women under age of 40 to 45 age were mostly died because of breast cancer. Per year, 25% of women mortality rate is due to breast cancer. Treatment depends on the stage of cancer such as chemotherapy, radiation, hormone therapy and surgery. Breast cancer, approximate size of a peanut (2 centimeters or smaller) is very treatable and survivable.


scroll to top