அறுசுவைகள் நாம் உண்ணும் உணவு விருந்தாகவும் அதே சமயம் மருந்தாகவும் இருக்க வேண்டும்.

அறுசுவைகள்
இனிப்பு – sweet
புளிப்பு – sour
உவர்ப்பு – salt
கார்ப்பு – pungent
கசப்பு – bitter
துவர்ப்பு- astringent
ஒவ்வொரு சுவையும் அது தரும் பயன்களும் :
1 . இனிப்பு – தசையை வளர்க்கும்
2 . புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்
3 . உவர்ப்பு – உமிழ் நீரை சுரக்க செய்யும்
4 . கார்ப்பு – எலும்புகளை வலுவாக்கும்
5 . கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும்
6 . துவர்ப்பு – இரத்தம் சுத்தம் செய்யும்
உணவுப் பொருட்களும் அதன் சுவையும்:
*இனிப்பு உணவுகள் -கரும்பு , காரட் , பீட்ரூட் , அரிசி , வெல்லம் , கோதுமை பரங்கிகாய்
*புளிப்பு உணவுகள் -எலுமிச்சை , தக்காளி ,புளி, மாங்காய் , தயிர் , மோர் , நார்த்தங்காய்
*உவர்ப்பு உணவுகள் – வாழைத்தண்டு , பூசணி , முள்ளங்கி , சுரக்காய் , பீக்கங்காய்
*கார்ப்பு உணவுகள் -மிளகு, கடுகு , மஞ்சள் , மிளகாய் , வெங்காயம் , பூண்டு
*கசப்பு உணவுகள் -பாகற்காய் , சுண்டக்காய் , கத்திரிக்காய், வெந்தியம் , எள் , வேப்பம்பூ
*துவர்ப்பு உணவுகள் -மாதுளை , வாழைக்காய் , மாவடு , நெல்லிக்காய் , அத்திக்காய் , அவரை
உணவினை உண்ணும் நேரமும் அதன் அளவும் அதனை சமைக்கும் முறை மற்றும் பரிமாறுவதும் கூட உணவின் தன்மையை நிர்ணயிக்கும்.
எந்த வேளையில் உணவை உண்ணும் போது உணவின் அளவினைப்பற்றி தெளிவு வேண்டும்.

உணவு – அரை வயிறு
நீர் – கால் வயிறு
காலி – கால் வயிறு
அதை போல ஒரு நாளைக்கு இரு வேலைதான் உண்ண வேண்டும் என்றே வலியுறுத்துகின்றனர். ஆனால் இன்றைய பரப்பான உலகில் இது சாத்தியமில்லை.
உணவை உண்ணும் போது செய்ய வேண்டியவை :
பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.வயிறுமுட்ட உண்பதோ , உணவு உண்டபின் உறங்குவதோ கூடாது. தண்ணீரை மென்று தின்னுவதுப்போல ,அதாவது மெதுவாக ரசித்து ருசித்து துளி துளியாக பருக வேண்டும். உணவை குடிக்க வேண்டும் என்பார்கள் அதாவது உணவு வாயில் இருக்கும் போதே கூழாக மென்று உமிழ்நீரோடு பின்பு மெதுவாய் ரசித்து ருசித்து விழுங்க வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







