முதுகெலும்புகளை  பலப்படுத்தும் உத்திதா ஹஸ்தா பதங்குஸ்தாசனம் 

உத்திதா ஹஸ்தா பதங்குஸ்தாசனத்தில் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டானம் ஆகிய இரு சக்கரங்கள் தூண்டப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. வடமொழியில் உத்திதா  என்றால் ‘நீட்டுதல்’, ‘ஹஸ்த’ என்றால் ‘கை’, ‘பாத’ என்றால் ‘பாதம்’ மற்றும் ‘அங்குஸ்தா’ என்றால் ‘பெருவிரல்’ என்று பொருள். இதனால்  இது கையால் கால் பெருவிரலைப் பற்றி காலை நீட்டுதல் என்று பொருளாகும். இதன் ஆங்கில பெயரானது  Extended Hand to Big Toe போஸ் என கூறப்படுகிறது.


உத்திதா  ஹஸ்த பாதங்குஸ்தாசனத்தில் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டானம் ஆகிய இரு சக்கரங்கள் தூண்டப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகின்றன. மூலாதாரம் நிலையான தன்மையை கொடுக்கிறது. படைப்புத் திறனை சுவாதிட்டானம்  வளர்க்கிறது. முன்னர் நாம் பாதங்குஸ்தாசனத்தில் சொல்லியது போல் கட்டை விரல் அழுந்துவதால் கல்லீரல், மண்ணீரல் சக்தி ஓட்டப் பாதைகள் செழுமையாக இயங்கி இவ்விரண்டு உறுப்புகளின் நலனும் பாதுகாக்கிறது.


உத்திதா  ஹஸ்த பாதங்குஸ்தாசனத்தின் மேலும் சில பலன்கள்

1 .நரம்பு மண்டலத்தை பலப்படுத்த பயன்படுவது 

2 .முதுகெலும்பை பலப்படுத்த பயன்படுவது 

3 .முதுகுப் பகுதியை உறுதியாக்க உதவுகிறது 

4 .கால்களை நீட்சியடையச் செய்வதுடன் கால் தசைகளைப் பலப்படுத்தவும் உதவுகிறது 

5 .இடுப்புப் பகுதியை நீட்சியடைய செய்ய பயன்படுகிறது 

6 . இடுப்பைப் பலப்படுத்த உதவுகிறது 

7 .சீரண கோளாறுகளை நேர் செய்ய பயன்படுகிறது 

8 .உடல், மனம் இரண்டின் சமநிலையைப் பாதுகாக்க உதவுகிறது.

9 .கவனத்தைக் கூர்மையாக்க பயன்படுவது

10 .மனதை அமைதியாக்குகிறது

11 .உடல் முழுமைக்கு ஆற்றல் சக்தி அளிக்கிறது

செய்முறை

தாடாசனத்தில் நின்று உடல் எடையை இடது கால் தாங்கிக்கொள்ளுமாறு  நின்று வலது காலை மடித்து நெஞ்சு வரை உயர்த்தி தூக்கவும்.

வலது கையை வலது காலின் உட்புறமாக கொண்டு வந்து வலது கால் பெருவிரலைப் வலது கை சுட்டு விரல், நடு விரல் மற்றும் கட்டை விரலால் வளைத்துப் பற்றவும்.நேராக நின்று காலை மெதுவாக முன்புறமாக  அல்லது பக்கவாட்டில் நீட்டவும். முட்டி வளையாதிருருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். 

இடது கையை தொங்க விடும்படியாக அல்லது இடுப்பில் வைக்கவும்.பின்னர் இந்நிலையில்  20 வினாடிகள்  இருந்த பின் வலது காலைத் தரையில் படும்படியாக காலை மாற்றி மீண்டும் செய்யவும்.

குறிப்பு

தீவிரப் பிரச்சினை இடுப்பு அல்லது மூட்டுகளில் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.

ஒரு காலில் நிற்பது கடினமாக இருந்தால் சுவரோடு லேசாக ஒட்டியபடி நின்று இந்த ஆசனத்தை பழகவும். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women