முதலை இருக்கை “மகராசனம்” இந்த ஆசனத்தை நாம் தினந்தோறும் தொடர்ந்து செய்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். சர்க்கரை நோய், மலச்சிக்கல், வயிற்று வலி ஆகியவற்றிற்கு உகந்த இருக்கை இது.
தரையில் முதலில் போர்வையை விரித்து மேல் குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைக்க வேண்டும்.பின்பு நெற்றி “முகம்” தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். தலைக்கு மேல் கைகளை நீட்டி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
நன்றாக கால்களை நீட்டிக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து கொண்டே கைகளையும், கால்களையும் தரையில் இருந்து தூக்கவும்.தொடர்ந்து நீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வயிற்று பகுதியானது உடலின் எடையை தாங்கும்.
இந்த கைகள், கால்கள் தூக்கியபடி மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசிப்பதன் பின்பு மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி பொறுமையாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஓய்வு எடுத்ததின் பிறகு மீண்டும் செய்யலாம். இவ்வாறு இந்த ஆசனத்தை மூன்று முதல் ஐந்து வரை செய்யவும்.
படத்தில் காட்டப்பட்ட அமைப்பு முறைகளில் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற பல்வேறு இலகு நிலைகளிலும் செய்யலாம். இது பல்வேறு நிலைகள் கொண்டு பல்வேறு பெயர்களில் காணப்படுகின்றன.
பலன்கள்:
- சுரப்பிகள் சரிவர இயங்கும். கால், வயிறு, இடுப்பு ஆகியவை பலம் பெறும்.
- ஊளைச்சதை குறையும்.
- உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக அமையும்.
- பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்
- சர்க்கரை நோய், மலச்சிக்கல், வயிற்று வலி ஆகியவற்றிற்கு உகந்த இருக்கை இது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







