தைராய்டு கோளாறுகள் பற்றி அறிந்து கொள்வோம்!

Thyroid in women

தைராய்டு தரும் தொல்லைகள் பெரும்பாலும் பெண்களைத் தான் பாடாய்படுத்துகிறது. தைராய்டு ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு அவசியம் ஆகவே தான் அதில் ஏதாவது ஏற்றத்தாழ்வு ஏற்படும் போது உடலின் மொத்த இயக்கங்களும் திணறுகிறது. அதாங்க…. சிஸ்டம் கெட்டுப்போக ஆரம்பிக்கிறது.

தைராய்டு சுரப்பி
தைராய்டு ஹார்மோன்களை சுரக்கும் தைராய்டு கழுத்தில் ஆடம்ஸ் ஆப்பிளுக்கு கீழே வண்ணத்துப்பூச்சி வடிவில் காணப்படும். நம் உட்கொள்ளும் உணவில் இருந்து அயோடினை எடுத்துக் கொண்டு, அதன்மூலம் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.Triiodothyronine (T3) – ட்ரை அயடோ தைரோனின்
Thyroxine (T4) – தைராக்ஸின்

மேற்கண்ட இரண்டு ஹார்மோன்களும், பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து வரும் தைராய்டு சுரப்பை தூண்டும் ஹார்மோன்களின் தூண்டுதல் பெயரால் சுரக்கிறது.

தைராய்டு சுரப்பியின் பணிகள்
நாளமில்லா சுரப்பிகளில் ஒன்றான தைராய்டில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தில் நேரடியாக கலந்து, உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் சென்று அதன் வளர்சிதை மாற்றங்களை அதாவது மெட்டபாலிசத்தை தூண்டுகிறது.

உதாரணமாக T4 &T3 இதயத்துடிப்பை சீராக்குகிறது மற்றும் குடலில் உணவு செரிமானத்தை வேகப்படுத்துகிறது.

T4 & T3 அதிகமாக சுரக்கும் போது இதயத்துடிப்பு வேகமாகவும், வயிற்றுப்போக்கு இதன் விளைவாக உடல் எடை குறைகிறது.

T4 & T3 குறைவாக சுரக்கும் போது இதயத்துடிப்பு மெதுவாகவும், மலச்சிக்கல் ஏற்படும். நாளடைவில் உடல் எடை அதிகரிக்கிறது.

ஹைபர் தைராய்டிசம்
நம் உடலில் (T4 & T4 ) தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும் நிலையைத்தான் ஹைபர்தைராய்டிசம் என்கிறோம். தைராய்டு ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதை உடலில் ஏற்படும் அறிகுறிகள் மூலம் தெரிய வரும் போது, மருத்துவரை அணுகி ஆய்வக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு உரிய மருந்துகள் எடுத்துக் கொண்டு பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம்.

ஹைபர் தைராய்டிசத்தின் அறிகுறிகள்

Mental Depression

படப்படப்பு
நரம்பு தளர்ச்சி
மனச்சோர்வு
வியர்வை அதிகரித்தல்
கைகள் நடுக்கம்
முடி உதிர்தல்
மாதவிடாய் தவறுதல் (அல்லது) இலேசான உதிரப் போக்கு

ஹைபோ தைராய்டிசம்
தைராய்டு சுரப்பியின் ஹார்மோன்கள் குறைவாக சுரப்பதால் ஏற்படும் நிலையைத் தான் ஹைபோ தைராய்டிசம் என்கிறோம்.

அறிகுறிகள்

Joints

உறக்கம் வருவதில் சிக்கல்
சோர்வு
கவனச்சிதறல்
உலர்சருமம் & முடி
மன அழுத்தம்
குளிர் தாங்க இயலாது
அதிக உதிரப்போக்கு
மூட்டுவலி

தைராய்டு பிரச்சினை என்று தெரிந்தாலே மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருத்துவம் பார்க்க வேண்டும். தைராய்டு நோயாளிகள் அதற்கேற்ற உணவுமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டும்.கடல் உணவுகளை எச்சரிக்கையுடன் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவரை யோகா, இயற்கை மருத்துவ முறைகளில் தைராய்டு நோய்கள் குணமானது என்று எந்த வித மருத்துவ ஆய்வுகள் இல்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.


Thyroid is a gland in the neck. It creates hormones that affect metabolism. Thyroid disease is a medical condition that affects the function of the thyroid gland (the endocrine organ found at the front of the neck that produces thyroid hormones). Thyroid disorders are mostly encountered in women than men. Diseases of the thyroid gland can result in either production of too much (overactive thyroid disease or hyperthyroidism), too little (underactive thyroid disease or hypothyroidism) thyroid hormone, thyroid nodules, and/or goiter. Thyroid disorders include Hashimoto’s disease, Graves’ disease, and goiter. With proper diagnosis and treatments it can be cured.


Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas