நமது வீட்டில் உள்ள சாதாரண அரிசி மாவு சிறந்த ஃபேஸ் க்ளென்சர். அரிசி மாவு என்பது பெரிதாக ஒன்றும் சிரமப்பட வேண்டிய விஷயமல்ல. பச்சரிசியை நன்கு நைசாக அரைத்துப் பயன்படுத்துவது தான் அரிசி மாவு. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அரிசி மாவில் மிக அதிக அளவில் பாரா அமினோ பென்சோயிக் அமிலம் இருக்கிறது. இது மிகச்சிறந்த சன் ஸ்கிரீனாக நம்முடைய சருமத்துக்குப் பயன்படுகிறது.இதிலுள்ள வைட்டமின் பி சருமத்தை வயதான தோற்றத்தைக் கொடுக்காமல் பாதுகாக்கிறது.இதனால் முகம் சுருக்கங்கள் நீங்கி பொலிவு பெறும். அரிசி மாவு கொண்டு செய்யும் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

* அரிசி மாவு உடன் பயத்தமாவு :
அரிசி மாவு இரு பங்கு பயத்த மாவு 1 பங்கு உடன் மஞ்சள் சிறிது மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதை முகத்தில் புருவம், கண்ணிமைகள், உதடு ஆகிய இடங்களை விட்டு விட்டு கழுத்து வரை பூசி சில நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் வரை உலர விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் உடனடியாக உங்கள் முகத்தில் ஏற்பட்டுள்ள பொலிவை உணர முடியும்.
*அரிசி மாவுடன் பால் :
அரிசி மாவுடன் காய்ச்சாத பால் மற்றும் தேன் சேர்த்து கொள்ளவும். ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு நன்கு கட்டியில்லாமல் கலக்குங்கள். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்து வட்ட வடிவில் ரப் செய்து தேயுங்கள். 20 நிமிடங்கள் வரை முகத்தில் அப்படியே வைத்திருங்கள். பின் நன்கு உலர்ந்த பின் கழுவி விட்டால் போதும்.காய்ச்சாத பால் மிகச்சிறந்த கிளன்சராக சருமத்தில் செயல்படுகிறது. அதோடு சருமத் துளைகளுக்குள் தங்கியிருக்கும் அழுக்குகளை நீக்கி, முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்குகிறது.

*அரிசி மாவும் முட்டை வெள்ளைக்கருவும் :
அரிசி மாவு மட்டும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் தளர்ந்து போயிருக்கும் தசைகளையும் இருக்கமாகச் செய்யும். இதனால் சருமத்தை வயதான தோற்றத்தை தவிர்த்து இளமையாக வைத்திருக்க முடியும். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்து வந்தால் போதும், செக்க சிவந்த பொலிவான முகத்தை பெறலாம்.
*அரிசி மாவும் தயிரும் :
அரிசி மாவு மற்றும் தயிர் இரண்டுமே சருமத்துக்கு பிளீச்சாகப் பயன்படுகிறது. இது சருமத்தின் நிறத்தை மெருகூட்டுகிறது. தயிர் சருமத்துக்கு சிறந்த பொலிவு தரும்.மேலும் மாய்ச்சரைஸராகவும் பயன்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







