சேலம் – அரூர் இடையே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி சேர்த்த ரமேஷ் (42). B.com பட்டதாரியான இவர் விவசாயத்தில் ஆர்வம் கொண்டு இத்தொழிலை செய்து வந்தார். இவருடைய மனைவி சத்யா.இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் கீழே விழுந்து கிடந்த தென்னை மட்டையை அகற்ற முயலும் போது அருகில் இருந்த மின்சார வயர் மீது தெரியாமல் கைப்பட்டு மின்சாரம் தாக்கப்பட்டதால் தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையறிந்த வீராணம் பகுதி போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







