கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் நியமனம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 2,000 மருத்துவர்கள் உட்பட 14,000 பேர் நியமனம் செய்யவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு நடத்தினர். அப்போது பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20,000 ரெம்டெசிவியர் மருந்து தேவையாக உள்ள நிலையில், மத்திய அரசு 7,000  ரெம்டெசிவியர் மருந்துகளை மட்டும் வழங்கி வருவதாக குற்றம் சாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார்.


 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course