நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் போட்டுக்கொண்டது கோவாக்ஸின் தடுப்பூசி. இவருக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி நேற்று காலை 11 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் மாலை 6 மணி அளவில் விளக்கம் அளித்தனர். அதில்,சிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ராஜு சிவசாமி கூறுகையில் ,
இன்று காலை வீட்டிலேயே நடிகர் விவேக் மயங்கி இருக்கிறார். மனைவியும் மகளும் காலை 11 மணிக்கு அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியிலேயே அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இங்கு வரும்போது விவேக் சுயநினைவு இல்லாமல் இருந்தார்.
அந்தத் தருணத்தில், விவேக்கின் இதயத்தில் இடது புற ரத்தக்குழாயில் 100 சதவிகிதம் அடைப்பு இருந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து ரத்தக்குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது.விவேக்குக்கு மாரடைப்பு ஏற்படுவது இதுவே முதல் முறை. எக்மோ சிகிச்சை தொடர்கிறது. ரத்த அழுத்தமும் இயல்பு நிலையில் இருக்கிறது. இன்னும் 24 மணி நேர தொடர் சிகிச்சைக்குப் பிறகே அவரது உடல்நிலை முன்னேற்றம் குறித்து கூற முடியும்.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. இந்த பாதிப்புக்கும் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.
ரஜினிகாந்த் ,கமல் போன்ற பிரபல நடிகர்கள்,நடிகைகள்,அரசியல் கட்சி தலைவர்கள் என பல பிரபலங்கள் விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று தங்களது பிரார்த்தனையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News