கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எடுத்தவாய்நத்தம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன். பாலியல் பலாத்கார வழக்கில் “போக்ஸோ” சட்டத்தில் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டு, கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

நேற்று காலை அறையின் ஜன்னல் கம்பியில் போர்வையால் தூக்கு போட்டு இறந்து கிடந்தார். அதை பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறகு அங்கு விரைந்த கடலூர் புதுநகர் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .







