சிலைகள் மீது தாக்குதல் – தமிழக பாஜகவினருக்கு அமித் ஷா எச்சரிக்கை

திரிபுரா மாநிலத்தில் பா.ஜா.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு பெருமளவில் வன்முறை வெடித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு உள்ள லெனின் சிலைகளை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநாள் திரிபுராவில் பதற்றம் நிலவுகிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதற்கிடையில், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவில், ‘லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று.

BJP National Leader H. Raja

நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்)’ என்று கூறியிருந்தார். இந்த பதிவு, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

எச்.ராஜாவின் இந்த பதிவை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அணைத்து தலைவர்களும் கட்சி பாகுபாடின்றி தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே பல இடங்களில் எச். ராஜாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்து வருகிறது. பா.ஜ.க.வின் தமிழ்நாடு தலைவர் திருமதி. தமிழிசையும், இது எச். ராஜாவின் சொந்த கருத்து என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், எச். ராஜா பெரியாரை பற்றிய அந்த பதிவிற்காக தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

Amit Shah BJP Leader

இந்நிலையில், பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சிலை உடைப்பு சம்பந்தமாக செயல்படும் தனது கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது பற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் கூறிருப்பதாவது,

“தமிழ்நாடு மற்றும் திரிபுரா ஆகிய மாநில கட்சி தொண்டர்களுக்கும் கூறிக்கொள்கிறேன். பாஜ.க தொடர்புடைய எந்த நபரும் சிலைகளை சேதபடுத்துவதில் தொடர்பு இருப்பதாக கண்டறிந்தால் கட்சியில் இருந்து கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.”

scroll to top