டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தவர்கள் கைது

எங்கு பார்த்தாலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி 6 லட்சம் கொள்ளையடித்த கொள்ளையர்களை போலீசார் சிசிடிவி  காட்சிகளை வைத்து பிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணா நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் முருகன் என்பவர் அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று மது விற்ற ரூபாய் 6,13,220- பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு முருகன் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் முருகனை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர்  பிரகாஷ் மேற்பார்வையில் குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை நடத்தி, சிசிடிவி  பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன் மூலம் பாரத், முத்து இருள்,  மணிகண்டன் என்ற சுருட்டை மணி ஆகியோர் டாஸ்மாக் ஊழியரான முருகனிடம் கொள்ளையில்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் முத்துஇருள் மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாரத் மற்றும் மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களும், ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course