ஸ்டெர்லைட் ஆலை திறப்பு பற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி பொதுக்கூட்டம்

கொரோனா இரண்டாம் அலை பாதிப்பானது மிகவும் மோசமாகி வரும் நிலையில் தற்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பது பற்றி அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தாவின் வழக்கில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி பற்றி இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது உச்சநீதிமன்றம். இதற்கான அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முன்வைக்க வேண்டிய வாதங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்து கேட்டு அதன் பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


அதன்படி, இன்று காலை 9.15 மணிக்கு அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் திமுக, பாஜக, மற்றும் இடதுசாரி கட்சிகள் பங்கேற்க உள்ளனர். திமுக சார்பில் எம்.பி. கனிமொழி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course