தற்போது எங்கு பார்த்தாலும் கஞ்சா கடத்தல் மற்றும் கஞ்சா விற்பனை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. கஞ்சா கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி ஹரி ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சென்னை போலீசார் ஆந்திரா விரைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் விருகம்பாக்கம் அருகே 8 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஹரி என்கிற நபர் மொத்தமாக கஞ்சா வாங்கிவந்து கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஹரியை தேடிவந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மதுரவாயில் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஹரியை மடக்கி பிடிக்க முயன்ற போலீசார் மீது ஹரி மற்றும் அவனது கூட்டாளிகள் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் காவலர் வள்ளிமுத்து ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளனர். போலீசார் மீது குற்றவாளிகள் நாட்டு வெடிகுண்டு வீசி இருப்பது மிகுந்த பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






