இன்றைய ராசிபலன் 27-05-2021

மேஷம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். தாழ்வு மனப்பான்மையால் மன இறுக்கம் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டு பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டும். வேலைச்சுமை மிகுந்த நாள் நாள்.

ரிஷபம்:  

எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மை கிட்டும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9.

மிதுனம்:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்‌. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 7.

கடகம்:

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுய ரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

சிம்மம்:

தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும் . உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று, வரவு கணிசமாக உயரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:  2, 5.

கன்னி:

 சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3, 9.

துலாம்:

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுங்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

விருச்சிகம்:

 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தையும் முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 9.

தனுசு:

கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்.  திடீர் பயணங்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:2, 5.

மகரம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வீட்டிற்கு விருந்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:2, 6, 9.

கும்பம்:

 திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும்‌. உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை மதிப்பார். முயற்சிகள் பலிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7.

மீனம்:

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், சிவப்பு; அதிர்ஷ்ட எண்கள்:3, 5, 7.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top