சென்னையில் சொமேட்டோ ஊழியர் உடையில் மதுபான பாட்டில் டோர் டெலிவரி!

தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்த  முழு ஊரடங்கானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி பலர் கள்ளச்சந்தையில் மதுபானத்தை விற்பனை செய்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
शराब के लिए मची होड़, अब Zomato ऑर्डर पर घर-घर करेगा डिलिवरी - zomato in preparation for alcohol home delivery
 
சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை – கேஜி ரோடு சந்திப்பில் போலீஸ் சப்- இன்ஸ்பெகடர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சொமேட்டோ ஊழியரை வழி மறித்து அடையாள அட்டை கேட்டுள்ளனர். அதற்கு அவர்  முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
 
 
இதனால் சந்தேகமடைந்த போலீசார்  இவர் கொண்டு செல்லும்  உணவுப்பெட்டியை சோதனை செய்த பார்த்த போது அதில் மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. இதையடுத்து பீர் பாட்டிலை பறிமுதல்  செய்து அந்த நபரை கைது செய்து  விசாரணை நடத்தினர்.
 
Zomato, Swiggy start alcohol delivery; here are the details | Technology News,The Indian Express
 
போலீஸ் விசாரணையில் அந்த இளைஞர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. சொமேட்டோ ஊழியரான இவர் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீட்டை தேடி மதுபானம் டோர் டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas