மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தோற்று உறுதி..

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Minister Thangamani with Corona

தொடர்ந்து அரசு பணிகளில் ஈடுபடுவதால் கடந்த 3 மாதங்களாகவே அவ்வப்போது பரிசோதனைக்கு உட்படுத்தி வந்த நிலையில், நேற்று மாலையும் அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இன்று காலை தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

scroll to top