போலீசார் சென்னையில் உள்ள தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம் செக்போஸ்ட் அருகில் போக்குவரத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக குடிபோதையில் புல்லட்டில் வந்த நபரை பரிசோதித்த போது 152MG அளவுக்கு குடித்திருந்தார். அவருக்கு போலீசார் அபராதம் விதித்து ஸ்லிப் வழங்கினார் .

இதையடுத்து ஆத்திரமடைந்த குடிபோதை ஆசாமி அங்கு வேலையில் இருந்த சட்டம் ஒழுங்கு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் என்பவரை கண்ணத்தில் அடித்துள்ளார். இதில் மயக்கமடைந்த உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் புல்லட்டில் வந்த குரோம்பேட்டையை சேர்ந்த 26 வயதான அஸ்வின்ராஜ் என்பவரை போலீசார் வாகனத்தை மடக்கி பிடிக்கும் போது, அவர் காதில் விலாதது போல் நிற்காமல் சென்றதால் அருகில் இருந்த ஒருவர் மீது மோதி அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அஸ்வின்ராஜை சேலையூர் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







