மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ???

சமீப நாட்களாக கொரோனாவின் அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை 700 பறக்கும் படையுடன் நடவடிக்கை எடுக்கவுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் என இன்னும் பல மாவட்டத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வு அறிவித்த பின் மக்கள் பொது இடங்களில் அதிகம் கூடுகின்றனர். அதுமட்டுமின்றி, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததால் நோயின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது.

   இதை தொடர்ந்து தற்போது தேர்தல் காலம் என்பதால் கட்சியினரின் பொதுக்கூட்டம் பிரச்சாரம் என மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அதனை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 700 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. அதில் காவல் துறை ஆய்வாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதனை குறித்து,சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாவட்ட துணை அதிகாரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

 

 அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். துக்க இடங்களில் மக்கள் அதிகளவில் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனென்றால் துக்க இடங்களில் இறுதி சடங்கின் போது தான் மக்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் அதனை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், கடைகள், வணிக வளாகங்கள் போன்ற பொது இடங்களில் நோய் தொற்று பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

  அதே போல் 45 வயது மேல் உள்ளவருக்கு தேவையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course