அம்மா முழு உடல் பரிசோதனை மையம்: முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தினை சென்னையில் இன்று முதல்வர் பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

Edappadi K. Palaniswamy


எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் புதிய உடல் பரிசோதனை மையத்தினை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இன்று முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் இரத்த பரிசோதனை முதல் மார்பக வரைவு, எலும்பு தின்மை அளவீடு உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளையும் செய்துகொள்ள முடியும். ஒவ்வொரு பரிசோதனைகளுக்கு வெவ்வேறு இடம் செல்லாமல், இந்த பரிசோதனைகள் அனைத்தையும் ஒரே இடத்தில செய்துகொள்ளலாம்.

அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் 3 விதமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

  • அம்மா கோல்ட் (AMMA GOLD) திட்டத்தின் கீழ் ரூ. 1000 செலுத்தி 60 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
  • அம்மா டைமண்ட் (AMMA DIAMOND) திட்டத்தின் கீழ் ரூ. 2000 செலுத்தி 65 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
  • அம்மா பிளாட்டினம் (AMMA PLATINUM) திட்டத்தின் கீழ் ரூ. 3000 செலுத்தி 70 வகையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள இந்த பரிசோதனை மையம் முழுவதுமாகக் குளிரூட்டப்பட்டுள்ளது. எல்லா நோய்களுக்கும் ஒரே இடத்தில் பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக இந்த மய்யம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிவு எண்கள்:

Tamilnadu Full body checkkup

முழு உடல் பரிசோதனைகளுக்காக 7338835555 மற்றும் 044-2566611 என்ற எண்களில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான முழு உடல் பரிசோதனை திட்ட துவக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.


Amma full body checkup center has been inaugurated by Tamilnadu chief minister Mr. K. Palasamy today. The cost per package with price details have been listed out for the beneficiaries. This is considered to be one of the dream scheme by former chief minister Ms. J. Jayalalithaa.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course