திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணவருடன் குடும்பம் நடத்துமாறு மனைவிக்கு நெருக்கடி கொடுத்ததால் குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்ற தாயின் உயிர் மருத்துவமனையில் ஊசலாடி வருகிறது. குப்புசாமிநாயுடு புரத்தை சேர்ந்த தமிழ்செல்விக்கும், பிரபுவுக்கும் திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருந்தன. கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார் தமிழ்செல்வி.

இந்த நிலையில் கணவருடன் சேர்ந்து வாழும் படி தமிழ்ச்செல்வியின் பெற்றோர் நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த தமிழ்செல்வி தனது 2 பெண் குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்துள்ளார். இதில் அந்த 2 பெண் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்செல்வி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






