இன்றைய ராசிபலன் 03-04-2021

மேஷம்:

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் மோதல்கள் வேண்டாமே.  புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்:

கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்துபோகும். தாயாரின் உடல் நிலைசீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரிப்பார்கள். நிம்மதி உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மிதுனம்:

சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வீர்கள். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

சிம்மம்:

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.உங்களைச சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:

பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.  வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:

குடும்பத்தினரிடம் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். துணிச்சலுடன் செயல்படும் நாள்.

விருச்சிகம்:

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சி ஏற்படும் நாள்.

தனுசு:

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படிபேசாதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மகரம்:

கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளிடம் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கும்பம்:

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரைச் சந்திப்பீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்: 9, 3

மீனம்:

எதையும் தாங்கும் மனோபலமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்: 4, 6

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top