கொரோனா வைரஸ் ஏசி மூலம் பரவுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமா உலகம் முழுவதும் தற்போது உள்ள நிலைமையில், மக்களை மேலும் அச்சுறுத்தும் வகையில் வதந்திகளும் பரவி வருகின்றன. மக்களுக்கும், எது வதந்தி அல்லது உண்மை என்று தெரியாமல் குழம்பி போயுள்ளனர்.

Corona Virus and Air Conditioner

வெயிலில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று சமீபத்தில் சில ஆய்வுகள் வெளிவந்தன. அதேசமயம், வெயிலில் கொரோன வைரஸ் வெயிலில் முற்றிலும் அழிந்துவிடும் என்றில்லை. குளிர் மற்றும் ஈரமான சூழலில் கொரோன வைரஸின் உயிர்ப்பும் மற்றும் அதன் பெருக்கமும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், ஏசியை பயன்படுத்தினால் கொரோனா வைரஸின் உயிர்ப்பு மற்றும் கொரோனா வைரஸின் ஆயுட்காலம், அது படிந்திருக்கும் பொருளுக்கு பொருள் வேறுபடுவதையும், தட்பவெப்பநிலைக்கு ஏற்ப வைரஸின் ஆயுட்காலம் மாறுபடுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏசியை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று , ஏ.சி, பிரிட்ஜ் பொறியாளர்களுக்கான இந்திய சங்கம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி அறையினுள் ஏசியின் வெப்பநிலையானது 24 டிகிரி செல்சியஸிலிருந்து 30 டிகிரி செல்சியசுக்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதத்திற்குள் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

பொதுவாக ஏசி இருந்தால் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறக்க மாட்டார்கள். ஆனால், கொரோனா பரவும் காலமாக இருப்பதால், நீங்கள் ஏசி அறையில் இருந்தாலும் அடிக்கடி ஜன்னல் மற்றும் கதவுகளை திறந்து வைத்து வெளிக்காற்று உள்ளே வர அனுமதிக்க வேண்டுமென அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. ஏசியில் பயன்படுத்தப்படும் வடிகட்டி அதாவது பில்டரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏசி இல்லாமல், மின் விசிறிகள் இருந்தாலும் ஜன்னல்களை திறந்து வைக்கலாம் என்றும், எக்சாஸ்ட் ஃபேன் இருந்தால், அதனையும் பயன்படுத்தி காற்றோட்டத்தை சீர்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஊரடங்கினால் செயல்படாமல் இருக்கும் நிறுவனங்களில் உள்ள ஏசிக்களை முறையான பராமரிப்புக்கு பின்னரே பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்பாடு இல்லாததால் பூஞ்சை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women