தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச் செல்லும் ரெம்டெசிவியர் மருந்தை கொரோனா மருத்துவத்துக்கான மருந்து பட்டியலில் இருந்து உலக சுகாதார நிறுவனம் நீக்கி நீக்கியுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் தொற்றாளர்களுக்கு மருத்துவம் அளிக்க பயன்படுத்தும் மருந்துகளில் ரெம்டெசிவியர் முக்கிய இடம் வகித்தது. இரண்டாம் அலை பரவளில் மூச்சு திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவியர் மருந்து வழங்கப்பட்டு வந்தது. இந்த மருந்தால் பெரிதாக எந்த பயனும் இல்லை அதற்கு பதிலாக ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வந்தபோதிலும் ரெம்டெசிவியர் மருந்திற்கான தேவை அதிகரித்து வந்தது.
இதனை தமிழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வாங்கிச் சென்றனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தற்போது கொரோனா மருத்துவத்திற்காக மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவியர் மருந்தினை நீக்கியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







