கொரோனாவை இந்தியா வெல்வதற்கு தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசி மூலம் பொருட்களை அமெரிக்கா தந்து உதவும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசிக்கான மூலம் பொருட்களை இந்தியாவுக்கு தர அமெரிக்கா மறுப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

இந்நிலையில் அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று இரவு பேசினார். இரு நாடுகளிலும் நிலவும் கொரோனா சூழல் குறித்து பேசியதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். மேலும் தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை தடையின்றி பெறுவது குறித்தும் பேசப்பட்டதாக பிரதமர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Prime Minister @narendramodi’s telephone conversation with @POTUS @JoeBiden of the United States of America.https://t.co/kY8rqsfbEH
via NaMo App pic.twitter.com/mxaRC13elz
— PMO India (@PMOIndia) April 26, 2021
Just as India sent assistance to the United States as our hospitals were strained early in the pandemic, we are determined to help India in its time of need. https://t.co/SzWRj0eP3y
— President Biden (@POTUS) April 25, 2021
இதை தொடர்ந்து இரு நாடுகள் சார்பில் அறிக்கை மற்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொரோனாவுக்கு எதிராக இந்திய நடத்தி வரும் யுத்தத்தில் அமெரிக்கா துணை நிற்கும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.







