கடந்த சில வருடங்களாக தென்னிந்திய மொழியில் பெரும் வெற்றிபெற்ற படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்தவகையில், தற்போது சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் “சூரரைப் போற்று” படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா. மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தற்போது சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் சுதா கொங்கரா தான் இயக்க உள்ளாராம். மேலும், இந்த படத்தை தமிழை போலவே ஹிந்தியிலும் சூர்யாவின் 2D தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்நிலையில், ஹிந்தியில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த மாறா கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ராட்சசன் படத்தின் ரீமேக்கிலும் அக்ஷய் குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







