மேற்கு வங்க முதலமைச்சராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்.மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சி அமைக்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக இன்று பதவியேற்றார்.

நடந்து முடிந்த தேர்தலில் மம்தா போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியைத் தழுவினார். ஆனால் மம்தா முதல்வர் பதவியேற்க எந்தத் தடையும் இல்லை. எனவே கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10:45 மணிக்கு அவர் பதவி பிரமாணம் எடுத்தார். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பதவியேற்பு நிகழ்வு குறைந்த நபர்களுடன் எளிமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
I congratulate Mamata Ji on her third term. Our priority is that we must bring an end to this senseless violence that has affected society at large. I have every hope that the CM on an urgent basis will take all steps to restore rule of law: West Bengal Governor pic.twitter.com/bn3jbtQaGM
— ANI (@ANI) May 5, 2021







