இரண்டு நாட்கள் கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த கர்நாடக முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் குமாரசாமி பொறுப்பேற்கவுள்ளார். மே-21 திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளார். மேலும் பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து குமாரசாமி கூறுகையில், “காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம். ஆளுநரின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம், அவசரம் ஏதுமில்லை” என்று கூறினார்.
மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், “மே 21ஆம் தேதி குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்கும் விழாவுக்கு என்னை அழைத்துள்ளார், அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயகம் வென்றுள்ளது. தேவகவுடா, குமாரசாமி, காங்கிரஸ் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இது மாநில கட்சிக்கான வெற்றி என்றும் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
I just spoke with Kumaraswamy Ji and congratulated him. He invited me for the oath taking ceremony on Monday @hd_kumaraswamy
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2018
Democracy wins. Congratulations Karnataka. Congratulations DeveGowda Ji, Kumaraswamy Ji, Congress and others. Victory of the 'regional' front
— Mamata Banerjee (@MamataOfficial) May 19, 2018
காங்கிரஸ் மற்றும் மஜதவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
குமாரசாமி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்ற நடவடிக்கை காரணமாக கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளர். மேலும், மதச்சார்பற்ற அணியும், காங்கிரசும் ஒருங்கிணைந்தது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
ராகுல் காந்தி கூறுகையில், எம்எல்ஏக்களை மோடி பேரம் பேச முயன்றது சட்டப்பேரவையில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க போராடுவதாக மோடி கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய், அவரே ஒரு ஊழல்வாதி என்று கூறியுள்ளார்.
After the resignation of Yeddyurappa as Chief Minister of Karnataka for 2-days, according to the majority to form government Governor of Karnataka will be calling in HD Kumaraswamy to be the chief minister. As earlier, Congress-JD(S) parties have submitted their coalition stand to the governor after winning the elections, Kumaraswamy of JD(S) is becoming the chief minister with the support of congress party. More live news on Puthiya Thalaimurai TV.