தமிழகத்திலேயே மிக அதிகமான வாக்குகளை பெற்று ஐ.பெரியசாமி பிரம்மாண்ட வெற்றி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட  ஐ.பெரியசாமியும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில்  திலகபாமாவும் போட்டியிட்டனர்.  வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர். இதில் ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட திலகபாமாவை 1,32,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனால் எதிர்த்துப் போட்டியிட்ட மற்ற அனைத்து கட்சியினரும் டெபாசிட் இழந்தனர்.இதனையடுத்து                   ஐ.பெரியசாமி தமிழகத்திலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 கொரோனாவுக்கு பலியான காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வத்திராயிருப்பை சேர்ந்த அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான 62  வயதான மாதவராவ் போட்டியிட்டார். அவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் 2 நாட்கள் கூட்டணி கட்சியினருடன்  ஈடுபட்டார்.

இந்நிலையில் கடந்த ஏப். 11ம் தேதி கொரோனாவுக்கு மாதவராவ் உயிரிழந்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால், இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக சார்பில் நின்ற வேட்பாளர் மான்ராஜ் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course