
ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவது என அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது தகுதி பெற்றிருப்பவர்கள் Co-Win செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்ட 4 முதல் 6 வாரங்களுக்குள் அடுத்த டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.






