மனித நேயத்துடன் செயல்பட்ட  இளையராணி! நேரில் அழைத்து பாராட்டிய மு.க.ஸ்டாலின்..!

கொரோனா அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் இளையராணி என்ற இளம்பெண் மனிதநேயத்துடன் உதவியதை அறிந்து நெகிழ்ந்து போனேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில்  மூதாட்டி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் அவரை மகன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது வழியிலேயே மயங்கி விழுந்தார். கொரோனா அச்சம் காரணமாக அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வராத நிலையில் காட்டூர்  பகுதியை சேர்ந்த இளையராணி என்ற பெண் அந்த மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார். 

image

பின்னர் இருசக்கர  வாகனத்தில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால், வழியிலேயே  அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்த பெண்ணை பாராட்டியுள்ளார்.

சேலம் மாவட்டத்திற்கு கொரோனா தொற்று பரவல் ஆய்வுக்காக சென்ற அவர் மூதாட்டிக்கு உதவி புரிந்த இளையராணியை வரவழைத்து பாராட்டினார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இளையதலைமுறை நம்பிக்கையூட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top