மேஷம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உடல் நலம் சீராகும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.
சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்சினைகளை நினைத்து கோபப்பட்டு கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை கடிந்து கொள்ளாதீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.
மிதுனம்:
பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உடன் பிறந்தோரின் வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7.
கடகம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பற்று, வரவு உயரும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.
சிம்மம்:
பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.
கன்னி:
பால்ய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:1, 3,5, 9.
துலாம்:
துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7.
விருச்சிகம்:
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவு கூடும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை மதிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1,3, 5.
தனுசு:
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒரு வித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும் . வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களது மேலதிகாரிகள் தவறுகளை சுட்டிக்காட்டினால் மாற்றி கொள்வது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்:நீலம், இளஞ்சிவப்பு; அதிர்ஷ்ட எண்:3, 6, 9.
மகரம்:
குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்கள் வகையில் ஆரோக்யமான விவாதங்கள் விவாதங்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்1, 3, 5, 9.
கும்பம்:
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புது வேலை கிடைக்கும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் முழுத்திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
மீனம்:
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நம்பிக்கைக்குரியவர்களுடன் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.
அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






