கொரோனா தொற்றால் உயிரை தியாகம் செய்த அரசு மருத்துவமனை செவிலியர்! 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் கொரோனா  மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 40 வயதான செவிலியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைலையே மருத்துவம் பெற்று வந்தார். இந்த நிலையில் மேல் மருத்துவத்துக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இதைத்தொடர்ந்து இன்று மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வார்டில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக ஆக்சிஜன் கூடிய தீவிர மருத்துவ பிரிவு நோயாளிகள் வார்டில் பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course