கர்நாடகா: பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தொடர்ந்து முன்னிலை!

கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா முன்னிலை வகிக்கிறார்.

Latest Election Results in Karnataka

கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு இரண்டு தொகுதிகள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது. பின்னர், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையா பின்னடைவில் இருந்தார். இருப்பினும், மீண்டும் அடுத்த சுற்றில் முன்னிலைக்கு வந்தார்.

முன்னிலையில் உள்ள நிலவரங்களில் படி, காங்கிரஸ் 75 தொகுதிகளை நெருங்கும் போது பாஜகவும் 75 தொகுதிகளை நெருங்கியது. தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 26 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா அவர் போட்டியிட்ட சிகாரிபுரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

Yediyurappa of Karnataka

காலை 9.50 மணிக்கு பிறகான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. பாஜக 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 68 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதாதளம் தொகுதிகளிலும் 45 முன்னிலை வகித்து வருகின்றன.

பஜவிற்கான வெற்றிக்கே அதிக வாய்ப்புகள் இருப்பது தற்போது நிலவரம் தெரிவிக்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas