இன்றைய ராசிபலன் 26-05-2021

மேஷம்:

சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

ரிஷபம்:  

 மனைவி வழியில் ஆதரவு பெருகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில்  உயரதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

மிதுனம்:

உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்பு தேடி வரும். அமோகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, வெளிர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 7.

கடகம்:

ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு, பச்சை; அதிர்ஷ்ட எண்கள்:1, 7.

சிம்மம்:

தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு; அதிர்ஷ்ட எண்கள்: 4, 5.

கன்னி:

உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில்  சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:நீலம், பச்சை; அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

துலாம்:

 கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் நீங்கி அமைதி நிலவும். உறவினர்கள் மதிப்பார்கள். வாகன பழுது நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட நிறம்:சிவப்பு, அடர் நீலம்; அதிர்ஷ்ட எண்கள்: 2, 3.

விருச்சிகம்:

 ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும்.அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெளிர் மஞ்சள்; அதிர்ஷ்ட எண்கள்:3, 9.

தனுசு:

 திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். அரசாங்க விஷயங்கள் தாமதமாகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட நிறம்:பச்சை, மஞ்சள், நீலம்; அதிர்ஷ்ட எண்:2, 5, 7.

மகரம்:

பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்; அதிர்ஷ்ட எண்கள்:3, 6, 9.

கும்பம்:

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள்  தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், நீலம், வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:2, 6, 9.

மீனம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள், பச்சை, வெள்ளை; அதிர்ஷ்ட எண்கள்:5, 9.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas