தமிழ் திரைப்படத்தின் சின்னக்கலைவாணராக வலம் வந்த நடிகர் விவேக்கின் மறைவு திரை துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விவேக் அவர்கள் திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அடுத்த நாள் (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருக்கு வயது 59. நடிகர் விஜய் அவர்கள் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் விவேக்கின் இறுதி அஞ்சலிக்கு அவரால் வர முடியவில்லை.

இந்நிலையில் நேற்று ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய் இன்று விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







