கொரோனாவிலிருந்து குணமடைந்த சச்சின் தனது 48 வது பிறந்தநாளில்  பிளாஸ்மா தானம்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 48 வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார். பின் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், பிளாஸ்மா தானம் செய்ய தனது உடல் தகுதி பெற்றவுடன் தான் பிளாஸ்மா தானம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த மோசமான சூழலில்  எனது குடும்பத்தினர்,  நண்பர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் பிரார்த்தனையும், நல் வாழ்த்துக்களும் தான் மனரீதியாக நான் உறுதியுடன் இருக்கவும் நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரவும் பக்க பலமாக உதவியது. ஆகையால் அனைவருக்கும் நன்றி.

 

மேலும் மருத்துவர்களை ஆலோசித்து அவர்கள் அனுமதித்தால் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு எடுத்து உள்ளேன். சரியான நேரத்தில் செய்யும் இந்த உதவியினால் பல நோயாளிகளின் உயிரை காக்க முடியும். ஆகையால் நீங்களும் முடிந்த வரை ரத்த தானம் செய்து சக மனிதர்களுக்கு உதவ வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என தந்து ட்விட்டர் பக்கத்தில்  சச்சின் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com