ஆந்திர மாநிலம் தடா ரயில் நிலையம் அருகே வைத்திருந்த வெடிகுண்டுகளை இளைஞன் ஒருவர் அதை எடுக்க முயன்றபோது வெடிகுண்டு வெடித்து படுகாயம் அடைந்தார்.

ரயில் தண்டவாளத்தில் காலை 6 மணி அளவில் வெடி சத்தம் கேட்டது, ரயில்வே போலீசார் சென்று பார்க்கும்போது அந்த இளைஞர் வெடிகுண்டு வெடித்து படுகாயத்துடன் கிடந்துள்ளார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிய பின் குண்டு வெடித்த இடத்திலிருந்து 10 மீட்டர் தூரத்தில் துணியால் சுற்றப்பட்ட மற்றொரு குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
அதன்படி சென்னையில் இருந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை ஆய்வு செய்து வருகின்றனர்.







