ஆந்திர மாநிலத்தில் முன் பகையால் உறங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தை உள்ளிட்ட 6 பேரை ரத்தம் சிதற சிதற கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் ஜூட்டாடா கிராமத்தை சேர்ந்த ராமாராவ் என்பவர் தன்னுடைய வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இதனை அடுத்து அதிகாலை நேரத்தில் ராமாராவ் வீட்டருகே உள்ள அப்புல்ராவ் என்பவர் வீட்டிற்குள் நுழைந்து ராமாராவின் மனைவி உஷா, அருணா, 2 மாத குழந்தை நிஷா மற்றும் 2 வயது மகன் உதய் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனைத்தொடர்ந்து, அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் இரத்த வெல்லத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொலையாளி அப்புல்ராவை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த கொடூர படுகொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து முன்பகை காரணமாகவே இந்த விபரீதம் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. பச்சை குழந்தை என்று பாராமல் வெட்டி கதற கதற கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







