நரேந்திர மோடி நாளை இங்கிலாந்து பிரதமர் உடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை

இந்தியா- இங்கிலாந்து பிரதமர்கள் இடையே மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாடு நாளை நடைபெறவுள்ளது. இதில், இந்திய பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டுத் தலைவர்களின் ஆலோசனை உதவும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் ராணுவம் மற்றும் பாதுகாப்பு பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்த இந்த கருத்தாய்வு உதவும் என தெரிவித்துள்ளது.

 

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து விடுபட இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படவும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை இந்தியா வாய்ப்பாக பார்க்க தொடங்கிவிட்டது.

இதற்கிடையில், COVID-19 இன் புதிய எண்ணிக்கை அதிகரித்து வருவதை சமாளிக்க உதவுவதற்காக மேலும் 1,000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பப்போவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas