காலையில் எழுந்ததும் காபி , டீ , நீராகாரம் என ஏதோவொரு உற்சாக பானம் குடித்துத் தான் அன்றைய தினத்தை ஆரம்பிப்பது நம்மில் பெரும்பாலானோர் பழக்கம். காபி குடிக்கும் பழக்கத்தை ஆரோக்கியம் அல்லது ஆரோக்கியமற்றது என இருபெரும் கருத்துகளுடன் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளது. காபி எப்போது உடலுக்கு தீங்காகிறது என்றால் காபியுடன் பால் , க்ரீம் , சர்க்கரை சேர்த்து குடிக்கும் போது அதன் கலோரி மதிப்பு கூடுகிறது. காப்பியில் உள்ள காஃப்பின் எனும் வேதிப்பொருளின் நல்ல பலனை பெற இயலுவதில்லை. காப்பியை எப்படி ஆரோக்கியமான முறையில் குடிக்கலாம் என்று பார்ப்போம்.

காப்பி கொழுப்பை கரைக்குமா ?
காப்பியில் உள்ள காஃபின் மட்டும் அல்ல காப்பியானது கீட்டோசிஸை தூண்டும் அதாவது மெட்டபாலிசத்தில் உடலில் சேர்த்து வைத்துள்ள கொழுப்பினை கரைத்து கீட்டோன்களாக மாற்றுகிறது. இதுவும் ஒரு வகையான க்ளுக்கோஸ் என்பதால் கார்போஹைட்ரேட் உணவு இல்லாமல் க்ளுக்கோஸ் தேவை நிறைவேறுகிறது அதேசமயம் உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கொழுப்பும் கரைகிறது. கீட்டோஜெனிக் டயட்டில் இதுவொரு முக்கிய ரெசிபி.
காப்பியில் தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் என்பது தாவரக்கொழுப்பு என்று நாமறிவோம்.இதனை ஏன் காப்பியில் கலந்து குடிக்கவேண்டும் என்பது நம்மில் பலருக்கு வரும் சந்தேகம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் கொழுப்பின் வகையானது medium-chain triglycerides (MCTs). இதனை உட்கொள்ளும் போது கல்லீரலானது மிக வேகமாக இதனை எடுத்துக் கொண்டு அதே வேகத்தில் ஆற்றலாக மாற்றும். காப்பியில் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்தால் கீட்டோசிஸ் எனும் நிலையில் நீண்ட நேரம் இருக்க உதவும். விளைவு உடலில் உள்ள கொழுப்பு ஐ ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதனால் கொழுப்பு கரைகிறது.

தேங்காய் எண்ணெய் அளவு :
கடும் காப்பியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் போதுமானது. ஏனெனில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயின் கலோரி மதிப்பு என்பது 124 கலோரி . ஆகவே இரண்டு அல்லது அதற்கு மேல் தேங்காய் எண்ணெய் வேண்டாம். காப்பியின் கலோரி மதிப்பு அதிகரிக்கும் மேலும் எண்ணெய் பிசுபிசுப்பு வாந்தி வரவழைக்கும். இதனையும் பருகி காலை உணவு வும் எடுத்துக் கொள்ளும் போது எடைக்குறைவோ , இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையாது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







