எடைக்குறைக்க விரும்புபவர்களுக்கு டின்னர் சாலட்!

உடல்எடையே அனைத்து உடல்நலக்கேடுகளுக்கும் மூலக்காரணம் என்று தெரிந்தாலும், உடல் எடையை குறைக்க வேண்டி ஒவ்வொருவரும் படும் பாட்டை சொல்லி மாளாது. சத்தமில்லாமல் ஏறிய எடையை கட்டுக்குள் கொண்டு வர ஊர்உலகத்தில் யார் அனுபவக்கதைகளைக் சொன்னாலும் உடனே செய்ய ஆரம்பிக்கும் மனம் அதனை தொடர்வதில் தான் சோம்பி விடுகிறது.

மீண்டும் மீண்டும் அதே புராணம் தான், காய்கறிகளில் விட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் நிரம்பியவை உடலுக்கு அத்தியாவசியம். உடல் ஓய்வில் இருக்கும் இரவுநேரம் ஹெவியாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கார்போஹைட்ரேட் அதிகம் இல்லாத இந்த சாலட்டை இரவு உணவாக உட்கொள்ளும் போது கிடைக்கும் பலன்கள்

Dinner Recipe

* வயிறு நிரம்பும் சாலட்.
* செய்வது எளிது.
* உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படும் ஆரோக்கிய சாலட்.
* இதில் சேர்க்கப்படும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் உள்ள லாரிக் அமிலம்  ஹார்மோன் சுரப்பிகளை ஒழுங்கு படுத்தும் வகையில் செயல்படுகிறது.எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* தைராய்டு, PCOS  கோளாறு உள்ளவர்களுக்கும் ஏற்ற சாலட்.

வெஸ் புரோட்டின் சாலட்
* வெள்ளை சுண்டல் அல்லது பச்சை பயிறு – 1 கப்
* கொத்தமல்லி தழை
* வெள்ளரிக்காய்
* கேரட்
* பெரிய வெங்காயம்
* தக்காளி
* எலுமிச்சை சாறு
* தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்
* இந்துப்பு ( black salt)
* மிளகுத்தூள்

செய்முறை :
* வேகவைத்த சுண்டல் அல்லது பச்சைப்பயறு உடன் எலுமிச்சை சாறு,கொத்தமல்லி உப்பு தூவி எடுத்து வைக்கவும்.

Veg Salad

* நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய் (விருப்பம் போல காய்கறிகள்), மாதுளை முத்துக்கள், கேரட் துருவலையும் சேர்த்து கலக்கவும்.

* மேற்கண்ட கலவைகளை ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு இந்துப்பு, மிளகுத்தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து விட்டு சாப்பிடவும்.


Vegetable Protein Salad has main ingredient as chick pea/green gram which is rich in protein and vegetables(carrot, capsicum, tomato, cucumber) of our choice can be used. It is a healthy, nutritious salad helps weight loss and fitness. healthy eating habits. It is suitable dinner recipe for those who suffer from thyroid and PCOS. Eating salad almost every day may be one of the most healthy eating habits.Maintain your body young and fit by following the above procedure to make veg salad. Healthy Eating!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com