உங்கள் குழந்தைகளின் பார்வை திறனை வளர்க்க உங்கள் குழந்தைகளின் உணவுப் பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டுவது மிகவும் அவசியம். அப்படி செய்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தவிர்ப்பதோடு, அவர்கள் பெரியவர்களானாலும் நல்ல ஆரோக்கியமான பார்வையோடு இருப்பார்கள்.

நாவல்பழம் மற்றும் திராட்சைப்பழம்:

இந்த பழங்களில் ஆந்தோசையனின் அதிகம் உள்ளதால் உங்கள் குழந்தைகளின் நல்ல கண்பார்வைக்கு இது மிகவும் பயன் தரும். இது கண் சோர்வைக் குறைக்கும். மேலும் இந்த பழங்களில் குரோசிடின், ரெஸ்வெராட்ரால், செலினியம் மற்றும் ஜின்க் அதிக அளவில் இருப்பதால் உங்கள் கண்கள் நல்ல ஆரோக்கியம் பெரும்.
மீன்:

ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் கண் பார்வைக்கு மிகவும் தேவையானது. கூடுதலாக கண்கள் உலர்ந்து போவதை இது தடுக்கிறது. பல வகையான கடல் மீன்களில் குறிப்பாக சால்மன், டுனா, மேக்கிரல், ட்ராவுட் போன்ற மீன்களில் இந்த சத்து உட்பட பல உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
கீரை வகைகள்:

பச்சைக் கீரை வகைகளில் அதிகம் உயிர்ச்சத்து சி, இ மற்றும் கரோட்டினாய்டுகள், லியூடீன் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக பொன்னாங்கண்ணி, முருங்கை, பசலை, புதினா, பிரோக்கோலி போன்ற கீரை வகைகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளதால் நீண்ட காலம் உங்களுக்கு கண் நோய்களை வராமல் தடுக்கவும் குணப்படுத்தவும் உதவுகிறது.
ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கள்:

மாம்பழம், ஆரஞ்சு, காரட், எலுமிச்சை போன்ற பழங்களில் அதிக ஊட்டச்சத்து ஏ மற்றும் உயிர்ச்சத்து சி நிறைந்துள்ளதால் கண்களோடு இணைந்திருக்கும் மற்ற தசைகளும் சத்து பெரும். தினமும் பச்சையாக ஒரு காரட் உண்பதால் உங்கள் கண் பிரச்சனைக்கு மிகவும் நல்லது.
சூரியகாந்தி விதைகள்:

இதில் நிரம்பியுள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்களில் குறிப்பாக ஜிங்க் மற்றும் ஊட்டச்சத்து இ போன்ற சத்துக்கள் உங்கள் கண்களுக்கு கோளாறு வராமல் தடுக்க உதவுகின்றது.
முட்டை:

முட்டையில் இருக்கும் ஜின்ங்க், லுடீன் மற்றும் முட்டை கருவில் உள்ள ஸிக்ஸாந்தின் போன்ற சத்துக்கள் புற ஊதா கதிர் வீச்சின் பாதிப்புகளிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்கிறது.
முட்டைகோஸ்:

கண் பார்வைக் கோளாறுகளைக் குணப்படுத்த முட்டைகோஸ் மற்றும் சிவப்பு முட்டைகோஸ் போன்றவை கண் பார்வை வளத்திற்குப் பெரிதும் துணைபுரிகிறது. இதில் உயிர்ச்சத்து சி மற்றும் இ போன்ற கண்களை பாதுகாக்கும் சத்துக்களும் இதில் உள்ளன.
பூக்கோசு மற்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு:

பூக்கோசிலுள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கண்பார்வைக்கு மிகவும் உகந்தது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள பீடாகரோடின் மற்றும் ஊட்டச்சத்து ஈ நிறைந்துள்ளன. இவை உங்கள் கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
பால் பொருட்கள்:

பால், வெண்ணெய், தயிர், நெய், பன்னீர் என்று அனைத்திலுமே ஊட்டச்சத்து ஏ நிறைந்துள்ளது. இவற்றை போதிய அளவு உணவில் எடுத்துக் கொள்வதால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
தண்ணீர்:

தண்ணீர் என்பது வளமான கண் பார்வைக்கு இன்றியமையாதது.பல்வேறு கண் கோளாறுக்குக் கண்களின் ஈரப்பதம் குன்றுவதே காரணம். இதைத் தவிர்க்க போதிய தண்ணீர் அருந்த வேண்டும். அதாவது தினமும் 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது மிகவும் அவசியமானது.
கொட்டை மற்றும் பருப்பு வகைகள்:

முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளில் உயிர்ச்சத்து இ அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணி, மொச்சை மற்றும் அவரைக் கொட்டைகளில் பையோபிலவோனாய்ட் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளதால் உங்கள் கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக விளங்குகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







