தினந்தோறும் நீங்கள் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்களா? முக்கியமாக தெரிந்து கொள்ளவேண்டிய விஷயம்!   

நாம் அனைவரும்  “உணவுக்கு” முக்கியத்துவம் அளிக்கிறோம், ஆனால் “உடற்பயிற்சிக்கு” முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நோயின்றி வாழ்வதற்கு நடைபயிற்சி என்பது மிகவும் முக்கியமான ஓரு செயல்முறையாகும். 


நடைப்பயிற்சி

உங்கள் உடல் ஆரோக்கியமாக மற்றும் நலமுடன் வாழ்வதற்கு உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் தேவையானது . நாம் எல்லோரும் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு கொடுப்பதில்லை. ஆனால் நோயின்றி வாழ்வதற்கு நடைபயிற்சி என்பது  மிகவும் முக்கியமான ஓரு செயல்முறையாக கருதப்படுகிறது.அதேபோல் இன்று நாட்டில் பல பகுதிகளில்  பரவலாக உடற்பயிற்சி நிலையங்கள் தொடங்கி  செயல்பட்டு நடந்து வருகின்றனர். 

 எல்லா வித கருவிகளுடன்  உடற்பயிற்சிக்கென்றே மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர்.  உடற்பயிற்சியின் முக்கியத்துவம் நகர்ப்புறங்களில் நாளுக்கு நாள் உடற்பயிற்சி பழக்கம் அதிகரித்து வருகிறது. நகர்புறமாக்களிடம் உடற்பயிற்சி என்பது  ஒரு நவீன பழக்கமாக மாறி வருகிறது.இன்னும்  உடற்பயிற்சி மையம் பலர் செல்ல முடியவில்லை என்றாலும் சைக்கிள் ஓட்டுதல் அல்லது நடந்து செல்வதையோ கடைபிடிக்கின்றனர்.

  • நாம் நடக்கும்போது முன்னோக்கிப் பார்த்தவராக நெஞ்சை நிமிர்த்தியவாறு தரையை பார்க்காமல் இருந்த படி நடக்க வேண்டும்.
  • சாதாரணமாக தோள்களையும் ,கைகளை தளர்வாகவும் நெஞ்சை உயர்த்தியவாறும் வைத்து நடக்க வேண்டும்.
  •  பக்கவாட்டில் கைகளை அசையாமல்,முன்பும், பின்பும் ஓரே சீராக ஆட்டியவாறு நெஞ்சு பகுதியை விட உயர்த்தி விடாமல் நடந்து செல்ல வேண்டும். அதற்கேற்றவாறு கால்களும் பின் தொடரும்.
  • கெட்டியாகவும் உறுதியாகவும் அடி வயிற்றை வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியபடி  உடலைச் சற்றே முன்புறம் சாய்ந்தவாறு நடத்தல் வேண்டும்.
  • ஒரே நேர் கோட்டுப் பகுதியில் நடப்பதை போல கற்பனை செய்து கொண்டு காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடத்தல் வேண்டும்.

நடக்கும் போது  காலை உயர்த்துவதால் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தி தள்ளியவாறும், பூமியில் காலை வைக்கும் போது குதிகாலை பூமியில் பதித்தவாறும், இதே முறையால் முன்னங்கால் விரல்களையும் பதியவைத்து முன்னோக்கி செலுத்துங்கள்.

இயல்பாகவே  சுவாசித்து , சுவாசித்து காற்றை ஒரே சீரான வேகத்தில் அதிக அளவில் உள்ள செலுத்துங்கள். பின்பு வேகமாகவும்,அதே சமயத்தில் மூச்சிரைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.     

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com